Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
தலவாக்கலை ஜெயந்தி மாவத்தைப் பகுதியில், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, 18 வயது பாடசாலை மாணவரொருவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவன், குறித்த பகுதியிலுள்ள தனியார் வகுப்புக்கு, இன்று (11) சென்றுள்ளாரென்றும் இதன்போது, வகுப்பு நடைபெறும் இடத்தின் மேற்பகுதியிலிருந்த மின்சாரக் கம்பியை, சக மாணவர்களுடன் இணைந்து விளையாட்டுக்காகப் பிடிக்க முயன்றபோதே, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரென்றும் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago