Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 01 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பண்டாரவளை - எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (31.10.2022) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, வீட்டின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.
மேலும், விபத்தின் பின்னர் எல்ல பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
37 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
15 Aug 2025