2026 மே 09, சனிக்கிழமை

dd

’மின்மயானமும் வங்கியும் விரைவில் வரும்’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

“பிரதேச சபையை வலுப்படுத்தல்” வேலைத் திட்டத்தின் கீழ், நோர்வூட் விளையாட்டுத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்மயானத்தைப் பூரணப்படுத்தவும் நகரில் இலங்கை வங்கியின் கிளையை நிறுவுவதற்கும் 20 இலட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் உப தலைவர் டி. கிஷோர்குமார் தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நோர்வூட் விளையாட்டுத் தொகுதிக்கு அருகாமையில் மின்மயானம் அமைக்கப்படும் பணிகள் பூர்த்தி செய்யப்படாமையால், பிரதேசத்தில் மரணம் சம்பவிக்கும்போது, சடலங்களைத் தகனம் செய்வதற்காக, தலவாக்கலைக்குச் செல்லவேண்டியுள்ளது என்றும் இதனால் ஏற்படும் பாரிய அளவிலான செலவைக் கருத்தில் கொண்டே, மின்மயானத்தை அமைப்பதற்காக 13 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நோர்வூட் நகரில், எந்தவொரு வங்கி வசதியும் இல்லை என்றும் பிரதேசத்திலுள்ள மக்களும் வர்த்தகர்களும், எந்தத் தேவையாக இருந்தாலும், ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ நகரங்களுக்கே செல்லவேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், நோர்வூட் நகரில் இலங்கைக் கிளையொன்றை அமைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளுக்காக 7 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நகரங்களிலுள்ள வாசிகசாலைகளைப் பிரதேச சபை பொறுப்பேற்று நடத்துவது போல, தோட்டப் பகுதிகளிலுள்ள சகல வாசிகசாலைகளையும் பிரதேச சபை, பிரதேச செயலகம் பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று, உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பில், உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .