2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மின்விளக்குகள் ஒளிராமையால் பிரதேசவாசிகள் அவதி

செ.தி.பெருமாள்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலிய நகரிலுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் ஒளிராமையால், தாம் இரவு வேளைகளில் போக்குவரத்துச் செய்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக, மஸ்கெலியா நகரவாசிகள் மற்றும் பயணிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, அதிகாலை வேளையில் தலைநகருக்குச் செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். மஸ்கெலியா நகரில், கடந்த 6 மாத காலமாக மின்விளக்குகள் ஒளிராமலேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மஸ்கெலியா நகரைச் சுற்றியுள்ள பகுதி காடாக இருப்பதால், காட்டு விலங்குகள் வீதிகளில் இருப்பதைகூட கண்டறிந்துகொள்ள முடியாதளவு, வீதியெங்கும் இருள்சூழ்ந்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், வீதியில் பாரிய குழிகள் காணப்படுவதாகவும் இதனால், இரவு வேளைகளில் வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக பிரதேச சபையிடம் வினவியபோது, அம்பகமுவ பிரதேச சபையிடமிருந்து மின்குமிழ்கள் கிடைக்கவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .