Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஸன்
இந்துக்களின் தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரவுள்ள நேரத்தில், பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் அஜாக்கிரதையாக இருந்தால், நாடு மீண்டும் முடக்கப்படும் நிலை உருவாகலாம் என்பதை உணர்ந்து விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நகர்ப்புறங்களில் வேலை செய்து வந்த இளைஞர்கள் மலையகத்திலிருந்து இப்போதுதான் மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தொழில் செய்து தான் தமது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
இந்நிலையில், கொரோனா முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக எண்ணி
விடாமல், பொது மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியமாகும்.
அஜாக்கிரதையாக நடந்து கொள்ளும் போது மீண்டும் நாடு முடக்கப்படும்
சூழ்நிலை உருவாகலாம். கடந்த ஆண்டு எந்தவொரு பண்டிகையையும் மக்கள் கொண்டாட
முடியாமல் இருந்தது. இன்று நாடு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்துக்களின் தீபாவளிப் பண்டிகை வரவுள்ளது.
எனவே, பொது மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக நகரங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளவதோடு, முகக் கவசம் அணிவதில் கவனம் செலுத்தும் போது தம்மையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago