2025 மே 05, திங்கட்கிழமை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை

Freelancer   / 2023 நவம்பர் 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் ஊடாக பாயும் பிரதான நீரோடையும், துனுவில வீதி ஊடாக செல்லும் வஹகல ஓயாவும் நிரம்பியதால் அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நகரம் நீரில் மூழ்கியதால், A9 வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டதுடன், வெள்ளம் இருந்த போதும் செல்ல முயற்சித்த பஸ் மற்றும் லொறி ஒன்று வெள்ளத்தில் சிக்கி, பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அக்குறணையை அண்மித்த பல வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

அக்குரணை நகரம் ஒரு மாதத்தில் நீரில் மூழ்குவது இது ஐந்தாவது முறையாகும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X