2025 மே 12, திங்கட்கிழமை

மீன்பிடி பூனையின் சடலம் மீட்பு

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில், கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள தேயிலை மலையில், நேற்று (17) பிற்பகல். சுமார் இரண்டு அடி நீளமான, உயிரிழந்த நிலையில் மீன்பிடி பூனையொன்றின் சடலத்தை, பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, இந்த மீன்பிடி பூனையின் சடலம் மீட்கப்பட்டது. இந்தப் பூனையின் உடலில் சில காயங்கள்காணப்படுவதாகவும் இது உயிரிழப்பதற்கான காரணம் அறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் சடலம், நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X