Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ லெதன்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அண்மையில், மீன்பூனை(Fish cat) நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
மீன்பூனைகள் தங்களுடைய குட்டிகளுடன் இவ்வாறு நடமாடுகின்றன. பற்றைக்காட்டுக்குள் வசிக்கும் இவ்வாறான மீன்பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளை கொன்று தின்றுவிடுகின்றன என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, நேற்று (21) சுற்றித்திரிந்த மீன்பூனைகள் தொடர்பில், நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தோட்டத்துக்கு விரைந்த அதிகாரிகள், மீன்பூனைகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.
தோட்டங்களுக்கு அண்மையில் இருக்கும் பற்றைக்காடுகளுக்கு தீ மூட்டுவதால், இவ்வாறான மிருகங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி பூனைகள் மனிதர்களுக்கு எவ்விதமான தீங்குகளையும் விளைவிக்காத போதிலும், செல்லப்பிராணிகளை கொன்று தின்றுவிடுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago