2026 ஜனவரி 21, புதன்கிழமை

முகத்தில் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 மே 17 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை நகரிலிலுள்ள வியாபார நிலையமொன்றுக்கு அருகிலிருந்து, 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலத்தை, கம்பளை பொலிஸார் நேற்று(17) காலை மீட்டுள்ளனர்.

கம்பளை, உனம்புவ பகுதியிலிருந்து, பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஓட்டோவொன்றில் வந்து இறங்கும் காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், அவ்விடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே குறித் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X