2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் படுகாயம்

Janu   / 2025 ஜூலை 30 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில், ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா ஊவாகலே தோட்டம்  மேல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் முதுகுத் தண்டு பாதிப்பு காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிபோதையில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட மூன்று நண்பர்களும் தோட்டத்திலிருந்து லிந்துலை மெரேயா நகரத்திற்கு அதிவேகமாக முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது,  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .