2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி மினி லொறியுடன் மோதி விபத்து

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் உள்ள இரத்தினபுரி மல்வலை பிரதான வீதியில்  வியாழக்கிழமை (06) அன்று பிற்பகல் 2.00  மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்து இரத்தினபுரி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி நகரிலிருந்து மல்வலை நோக்கி சென்ற மினி லொறி  ஒன்றுடன்  எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை (சாரதி)தாய். அவர்களின் 3 பிள்ளைகளுமே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தொனி பிரதான வீதியில் இருந்து சிறிய வீதி ஒன்றிற்கு திருப்ப முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இது குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X