2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முட்டை விலை அதிகரிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை- நாவுலவுக்கு உட்பட்ட பிரதான நகரங்களிலுள்ள வியாபார நிலையங்கள், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக, நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

10-11 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைகளானது, தற்போது 14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

முட்டைக் கோழிகளுக்கு வழங்கப்படும் உணவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் மருந்துகளுக்கான விலையேற்றம் காரணமாகவே, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக, முட்டை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முட்டையின் விலையேற்றத்தால், தொகையாக முட்டையைக் கொள்வனவு செய்யும் வெதுப்பக உரிமையாளர்களே, அதிகளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .