2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முதலமைச்சர் அலுவலகத்தில் விசேட அறிவித்தல் பலகை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், திங்கட்கிழமை முதல் விசேட அறிவித்தல் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் பலகையில், 'ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், பணத்துக்காக எவ்வித சேவைகளும் முன்னெடுக்கப்படாது' என்று, சகோதர மொழியில் குறிபிடப்பட்டுள்ளது.

பணத்தை முன்னிலைப்படுத்தியே, ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக, கடந்த காலங்களில் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை மறுக்கும் வகையிலேயே, இந்த அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளதென, மேற்படி அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“எந்தவொருத் தொழிலை பெற்றுக்கொள்வதற்கும் பணத்தைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏற்படும் வெற்றிடங்களுக்குத் தகைமைகள் இருப்பின், அந்தத் தகைமைகளுக்கு ஏற்ப தொழில் வழங்கும் வேலைத்திட்டம் கிரமமாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்படும். இதற்காக எவரும் பணங்கொடுத்து ஏமாற வேண்டாம்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .