Mayu / 2024 ஜூலை 03 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், துவாரக்ஷன்
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் 7 கிலோ மீட்டர் கொண்ட பிரதான வீதியை புனரமைத்து தருமாறு டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டம் டயகம கிழக்கு தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு நடைபவணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஒவ்வொறு தேர்தல் காலத்திலும் இப்பகுதிக்கு வாக்கு கேட்டு சொகுசு வாகனங்களில் படையெடுத்து வரும் அரசியல் தலைவர்கள் இவ் வீதியை செப்பணிட்டு தருவதாக மக்கள் பார்வைக்கு கற்களை குவித்து அடிக்கல் நாட்டி செல்கிறார்கள்.
ஆனால் தேர்தலில் எமது வாக்குகளை பெற்ற பின் எம்மையும் ,எமது வீதியின் அபிவிருத்தியையும் மறுபடி ஒரு தேர்தல் வரும் வரை மறந்து விடுகின்றதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமது ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.

எனவே இவ்வீதியின் சீர்கேடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறுப்பு தெரிவிக்க முடியாது.

ஆகையால் இம்முறையும் இவ் வீதி ஊடாகவே தேர்தலுக்கு வாக்கு கேட்க அரசியல் வாதிகள் வரவேண்டும் இந்த நிலையில் முதலில் ரோட்டை போடு பிறகு ஓட்டை கேளு என்ற பிரதான கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம்.
பொதுமக்களின் நன்மை கருதி வீதியை செப்பனிட காலம் தாழ்த்தாது அரசியல் வாதிகள்,அரச திணைக்களங்கள்,அதிகாரிகள் நடவடிக்கையை எடுக்க முன் வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டதில் இருந்து கலைந்து சென்றனர்.

14 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
2 hours ago