2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

முத்துவிநாயகத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 இலட்ச ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் கே. முத்துவிநாயகத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மெல்சிரிபுர விவசாயப் பண்ணையில் உள்ள விடுதியை 2 வருடங்களுக்கு, வாடகைக்கு வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து, 6 இலட்ச ரூபாய் இலஞ்சத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் கே. முத்துவிநாயகம் கைதுசெய்யபட்டமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X