மொஹொமட் ஆஸிக் / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் வாழ்க்கையில் 40ஆவது ஆண்டை நிறைவு செய்யும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தபால் மற்றும் முஸ்லிம சமய விவகார முன்னாள் அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீமுக்கு, பாராட்டு விழாவும் சினேகபூர்வ ஒன்று கூடலும், நாளை (22) காலை 10 .00 மணிக்கு, கட்டுகஸதோட்டையிலுள்ள பெளத்த மண்டபக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
1977ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உருவானி பின்னர், அரசியலுக்குள் பிரவேசித்த இவர், மத்திய மாகாண சபையின் அமைச்சராக பல முறை நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர். ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், அன்று முதல் இன்று வரை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.
அத்துடன், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், தபால் மற்றும் முஸ்லிம சமய விவகார அமைச்சாகவும் அவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago