ஆ.ரமேஸ் / 2020 மார்ச் 16 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான கே.கே.பியசாஸ, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக யானைச் சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், இன்று காலை (16) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராகவும் அக்கட்சியின் முன்னோர்கள் முன்னெடுத்து வந்த மக்கள் சேவையையும் சரிவர தானும் இதுவரை காலமும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் யானை சின்னம் என்பது, ஐக்கிய தேசிய கட்சியின் தனிப்பெறும் சின்னமாகும் என்றும் அதை இலகுவில் யாரும் மறந்து விடவும் முடியாது தூக்கி எறிந்து விடவும் முடியாது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி, யானை சின்னத்துக்கு என தனியிடம் உள்ளது என்றும் அதேபோல மலையக மக்களது மனங்களில், யானை சின்னம் என்பது அன்று முதல் இன்று வரை முத்திரையாகப் பதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago