2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

‘முன்னாள் ஜனாதிபதியின் பேச்சில் மாற்றம்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரமைப்பின் திருத்தம் தொடர்பாக விஹாரைகளில் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் வேறொன்றையும் பேசி வருகிறார் என, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் தெரிவித்தார்.  

கண்டி மாவில்மடையிலுள்ள ஹரிஸ்பத்துவ ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அலுவலகத்தில், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  

அரசமைப்பு திருத்தம் சம்பந்தமாக உரையாடுவதற்கு, வெள்ளிக்கிழமை (11), நாடாளுமன்றக் குழு கூடியபோது, அரசமைப்பின் வடிவம், எவ்வாறு காணப்படும் என்பது பற்றியும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதில், எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்று அவர் கூறினார்.  

ஆனால், நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார் என்றும் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக, பிரதமர் கூறியிருந்தார் என்றும் தெரிவித்தார். எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் ஒன்றையும் விஹாரைகளில் வேறொன்றையும் கூறி வருகின்றார் என்று தெரிவித்த அவர், ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்ததைப் போன்று, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டால், நாடு செழிப்பாக இருக்கும் என்றும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .