Editorial / 2020 ஜனவரி 31 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}




பா.திருஞானம்
மலையகத்தின் கல்வி வளர்ச்சி, முன்னொரு போதும் இல்லாத வகையில், தற்போது வெற்றி பாதையில் முன்னோக்கி செல்வதாகவும் க.பொ.த உயர்தர பெறுபேறுகளும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள், பல்கலைகழகங்களுக்குத் தெரிவாக உள்ளமையும் அதனை நிரூபித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், இந்த வெற்றிகளின் பின்னணியில், மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் முன்பள்ளிகளும் உள்ளன என்றார்.
எனவே, மலையகத்திலுள்ள முன்பள்ளிகளையும் முன்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கா கற்கைநெறியைத் தொடர்ந்த மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா, கந்தப்பளை கோர்ட்லொஜ் பிரிவில் நடைபெற்ற முன்பள்ளி சிறரர்களின் பொங்கள் விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
“மலேசியாவில் நடைபெற்ற உலக முன்பள்ளி கல்வி மா நாட்டிலும் கலந்துகொண்டுள்ளேன். நாட்டுக்கு நாடு முன்பள்ளி கல்வியில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் முன்பள்ளி கல்வி 05 வயதுக்குப் பின்னரே நடைபெருகின்றது. பாடசாலைக்கு 7 வயதினிலேயே அனுமதிக்கின்றனர். ஆனால் இலங்கையில் சற்று வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது. முன்பள்ளி கல்வி என்பது, சிறார்களின் விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலேயே தங்கியுள்ளது. இதன் ஊடாகவே அவர்களுக்கு கல்வி புகட்டப்படுகின்றன” என்றார்.
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago