Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாஸ
மூங்கில் வெட்டுவதற்காக சென்ற சிறுவர்கள் இருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, மூங்கில் தோட்டத்தின் உரிமையாளரை, நாளை வரை (17) விளக்கமறியலில் வைக்குமாறு, தம்புள்ளை பதில் நீதவான் ஜயம்பதி ரத்னதிவாகர தெரிவித்தார்.
கலேவெல நிலந்தோருவ பிரதேசத்தைச் சேர்ந்த 14, 11 வயது சிறுவர்கள் இருவரே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படிச் சிறுவர்கள், மூங்கிலிலான துப்பக்கி ஒன்றைச் செய்வதற்குத் தேவையான மூங்கிலை வெட்டுவதற்காக, குறித்த நபரின் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.
இதன்போதே, மூங்கில் தோட்டத்தின் உரிமையாளர் அவ்விருவரையும் தாக்கியுள்ளார் என்றுத் தெரியவருகிறது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago