2026 ஜனவரி 21, புதன்கிழமை

மூடப்பட்டத் தொழிற்சாலைகள் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றம்

Kogilavani   / 2021 மே 18 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை, தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் பயத்தை ஒழித்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் மலையக மக்கள் உள்ளிட்ட அனைவரும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைபிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

“தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே, சம்பள உயர்வை வழங்க முடியும். தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே கொழுந்து பறிக்க முடியும். தொழிலாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் மேலதிகக் கொழுந்து பறித்தல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும், 30ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பிலான அறிக்கையை அடுத்த மாதமளவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X