2026 ஜனவரி 21, புதன்கிழமை

மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை

Kogilavani   / 2021 மே 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

புளத்கொஹூப்பிட்டிய லேவல கிராம சேவகர் பிரிவில், மூன்று பிள்ளைகளின் தாயொருவரை, கடந்த 11ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று, அவரது கணவர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சித்மி பாதிமா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவிஸ்ஸவாளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவரும் மேற்படிப் பெண், கடந்த 11 ஆம் திகதி தனது கணவருக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் வீட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்பு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பெண்ணை கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X