Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச, ஆர்.ரமேஸ்
ஹட்டன் சலங்கத்த, பசறை- நமுனுகல மற்றும் றொசல்ல ஆகிய பகுதிகளில், கடந்த மூன்று தினங்களில் ஏற்பட்ட மூன்று விபத்துகளில், ஒருவர் பலியாகியுள்ளதுடன், 10பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சலங்கந்தையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வானொன்று, சனிக்கிழமை இரவு ஹட்டன் சலங்கந்த பிரதான வீதி, எட்லி(பெரிய வேறுகொலை) பகுதியில், 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஐவர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் சாரதி உட்பட ஐவரே, விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில், மூவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பசறை, தென்னக்கும்பர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற லொறி விபத்தில் படுகாயமடைந்த அறுவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்காரவத்த தென்னங்கும்பரயை சேர்ந்த டி.பிரகாஷ் (வயது 28) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தென்னக்கும்பர தோட்டத்தில், இடம்பெற்ற தேர்திருவிழாவையடுத்து, தேரை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக, லொறியில் சென்றவர்களே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறியும் ஹட்டனிலிருந்து கினிகத்தேன நோக்கி சென்ற காரும் றொசல்ல டி கார்டன் பகுதியில், நேற்றுக் காலை நோருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத போதிலும் வாகனங்கள் இரண்டும் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழை காரணமாக, பிரான வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதால், கார் வழுக்கிச் சென்று லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago