Janu / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பொலிஸ் பிரிவில், மதுரகெட்டிய பிரதேசத்தில், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்த நபரொருவரை, மூலோபயத்தை பயன்படுத்தி கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து 483 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை திங்கட்கிழமை (04) கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அக்கிராமத்துக்குச் சென்ற பொலிஸார், ஐஸ் போதைப்பொருளை கொள்வனவு செய்யும் நோக்கில் ஒருவரை மாறுவேடமிட்டு அனுப்பியுள்ளனர்.
அப்போது, அவ்வீட்டில் இருந்தவர்கள் ஐஸ் போதைப்பொருளை விற்பனைச் செய்ய முயன்றுள்ளார். மாறுவேடமிட்டவரின் பின்னால் சென்ற ஏனைய பொலிஸார், அவரை கைது செய்தததுடன், ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025