2025 மே 01, வியாழக்கிழமை

மூவின தீபாவளி கொண்டாட்டம் நாளை

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்  

மூவினத்தவர்களும் பங்குபற்றும் தீபாவளி கொண்டாட்டம், மத்திய மாகாணத்தில், சனிக்கிழமை (09) நடைபெறும்.

தெல்தெனிய, இரஜவலை, மாபெரிதன்ன தமிழ் மகா வித்தியாலயத்திலேயே மூவின மாணவர்களின் பங்குபற்றுதலோடு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் தலைமையில் தெல்தெனிய வலயக் கல்விப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறும்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன் விசேட அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.கொத்தலாவல சிங்கள வித்தியாலயம்,விஜிராபுர முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகளின் பங்குபற்றதலோடு நான்கு மதத்தவர்களின் ஆசீர்வாதத்துடன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .