Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை நாவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மெல்கொல்ல காட்டில், நேற்று (31) ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கு மேல் சென்றதாக, நாவுல வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெல்கொல்லவிலிருந்து குமாரவல வரை, காட்டுப் பகுதியாகக் காணப்டுவதாகவும் இந்த வனத்துக்கு, விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் நிலவுகின்ற , அதிகக் காற்று காரணமாக, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி காட்டுக்கு தீ வைத்தவர் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago