2024 மே 03, வெள்ளிக்கிழமை

மேசைகளில் எழுதிய விஞ்ஞான ஆசிரியர் கைது

Editorial   / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு  முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், விஞ்ஞான பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியரே இவ்வாறு, வியாழக்கிழமை (15)  கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 

தரம் 10 இல் கல்விப்பயிலும் மூன்று மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே தெரிவித்தார். 

சுமார் 5 வருடங்களாக அந்தப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றும் இந்த ஆசிரியர், இந்த மூன்று மாணவிகளிடமும் பாலியல் அழுத்தத்தை பிரயோகித்து குறுஞ்செய்திகள் பலவற்றை அனுப்பியுள்ளார். 

அந்த குறுஞ்செய்திகளுக்கு பாடசாலை மாணவிகள் மூவரும் பதிலளிக்கவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், மாணவிகளின் வகுப்பறைக்குச் சென்று, அந்த மாணவிகள் அமர்ந்திருக்கும் கதிரைகளுக்கு முன்பாக இருக்கும் மேசைகளின் மேல், “என்னுடைய யோசனைக்கு இணக்கமா?” என எழுதியுள்ளார்.

இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையிலேயே விஞ்ஞான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர் 44 வயதானவர் என்றும், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.   

ரஞ்சித் ராஜபக்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .