2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மேல்மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்

Editorial   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலி உடைந்தமையால் மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்து 15 அடி கீழே விழுந்து படுகாயமடைந்தவர் பதுளை பசறை வீதி 2 கனுவா பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவர் எனவும், அவர் பதுளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நகரம்.

பதுளை நகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் வீதி மைதானத்தில் ரக்பி பயிற்சிக்காக தனது தாயாருடன் காலை சென்றதாகவும், பிற்பகல் தனது தாயாருடன் சில தேவைகளுக்காக பதுளை நகரிலுள்ள மத்திய வர்த்தக நிலையத்திற்கு வந்து இரண்டாவது மாடியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்த இரும்பு வேலியில் மாணவன் சாய்ந்து இருந்த போதே அந்த கம்பிவேலி உடைந்து விழுந்து விட்டதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X