2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மைத்துனர் சண்டையில் துப்பாக்கி சூடு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில், நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், படுகாயமடைந்த 56 வயதுடைய நபர், எம்பிலிபிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மொரதவான பகுதியைச் சேர்ந்த கே.ரூபரத்ன எனும் குடும்பஸ்த்தரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காணித்தகராறு காரணமாக, இரண்டு மைத்துனர்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நீண்ட காலப் பகையே, இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரை கைது செய்ய முயன்றபோதும், அவர் தலைமறைவாகியுள்ளார் என்றும்  அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .