Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், காரசாரமாக விமர்சித்ததுடன், தகாத வார்த்தைப் பிரயோங்களை மேற்கொண்டனர் என்றக் குற்றச்சாட்டில், இரத்தினபுரி நகரில் வைத்து, நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் ஏழு பேரையும் பொலிஸார் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்துள்ளனர்.
குருவிட்ட பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 7 பேரே, இவ்வாறு எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு, தனியார் பஸ்ஸொன்றில் திரும்பிய போது, இரத்தினபுரி நகரில் வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களையும் ஜனாதிபதியையும் தகாத வார்த்தைகளால் திட்டியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் பயணித்துள்ளனர்.
இது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி எழுவரும், இரத்தினபுரியில் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனரெனவும் முறைப்பாடு கிடைத்துள்ளதென, குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பஸ், நேற்று அதிகாலை (15) 1 மணிக்கு இரத்தினபுரி பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு வாபஸ் பெற்றப்பட்டதையடுத்து, சந்தேக நபர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர், நேற்று(15) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago