Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}


பாலித ஆரியவன்ச
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைக்கு, விஷமிகளால், நேற்று (16) இரவு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படிக் கட்சியின் பதுளை அலுவலகமானது, பதுளை ககபட வீதியில், வியாக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்துக்கு அருகில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேனுகா விதானகமகே ஆகியோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தேனுகா விதானகமகேயின் புகைப்படத்துக்கு மட்டும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்து வந்த இருவரே, பதாதைக்கு சேதம் விளைவித்துச் சென்றுள்ளனர் என்றும் மேற்படி அலுவலகத்துக்கு முன்பாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago