2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மொனராகலையில் தொற்றின் வேகம் தணிந்தது

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் துசித அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாளாந்தம் 300- 500 தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில், மரணங்களும் நாளொன்றுக்கு மூன்றாக பதிவாகிவந்தன.

எனினும் கடந்த வாரம் மொனராகலை சுகாதாரப் பிரிவில் 50-75 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டதுடன், ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளது.

இதுவரை மொனராகலை மாவட்டத்தில் 18,735 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .