Janu / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை நகர மையத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், புதன்கிழமை (08) அன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு ஓட்டுனர்களும் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

26 minute ago
31 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
53 minute ago
1 hours ago