எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹல்துமுள்ளை பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்கு முற்பட்ட பிரதேச சபை உறுப்பினர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தியத்தலாவ அரசினர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஞாயிற்றுக்கிழமை (15) இரவு 8 மணியளவிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இரண்டு தரப்பினருக்கிடையே திடீரென ஏற்பட்ட முறுகள் மோதலாக மாறியத்தையடுத்து, ஹல்தமுள்ளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஆர்.எம். ஜயசேன, இந்த மோதலைத் தடுப்பதற்கு முயன்றுள்ளார்.
எனினும், இவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஹல்துமுள்ளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, தியத்தலாவ அரசினர் வைத்தியசாலைக்கு, அவர் மாற்றப்பட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளர் என்றும் விசாரணைகளின் பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும், ஹல்துமுள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா, இன்று (17) தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago