2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

யோகாசன செயலமர்வு

Gavitha   / 2016 ஜூன் 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயமும்  கண்டி பிரமக்குமாரிகள் ராஜயோக நிலையமும் இணைந்து நடத்திய யோகாசனம் தொடர்பான செயலமர்வு, கண்டி போகம்பறை மைதானத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இச்செயலமர்வை யோகக்கலை தொடர்பான போதனாசிரியர்களான மகேஷ், ஜானக, சந்திமா ஆகியோர் முன்னின்று நடத்தினர். பிரமக்குமாரிகள் ராஜயோக நிலையத்தைச் சேர்ந்த பிரம்மக்குமாரிகள் குழுவினர் தியானம் தொடர்பான செயலமர்வையும் மேற்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .