2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யோகட்டுகளுடன் கைதானவருக்கு அபராதம்

Administrator   / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

குளிரூட்டப்படாத நிலையில் சுமார் 24,000 ரூபாய் பெறுமதியான யோகட்களை வாகனமொன்றில் கொண்டுச் சென்ற குற்றச்சாட்டில் கைதான நபருக்கு 12,000 ரூபாய் தண்டபணம் விதித்துடன் கைப்பற்ற யோகட்களை அழிக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான், திங்கட்கிழமை(16) உத்தரவிட்டார்.

குளிரூட்டப்படாத நிலையில் வாகனமொன்றில் கொண்டுச் செல்லப்பட்ட யோகட் வகைகளை,  கடந்த 13ஆம் திகதி பொகவதந்தலாவை நகரில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியதுடன் அந்த வாகனத்தில் சென்றவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த யோகட் வகைகள் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதே அவை  கைப்பற்றப்பட்டன.

யோகட் போன்ற பொருட்களை விற்பனைக்காக கொண்டுசெல்லும்போது வாகனத்தில் இருக்கின்ற குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டல் தன்மை காணப்பட வேண்டும் என சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த தெரிவித்தார். 

மக்கள் இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புடன் செயற்படவேண்டுமெனவும் அவர்  கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .