2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யானைகளை பாதுகாக்க தேசியக்கொள்கை தேவை

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைகளை பாதுகாப்பதற்கு, தேசியக் கொள்கை அவசியம் என, யானைகளை பாதுகாக்கும் மறுசீரமைப்பு அமைப்பு, மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கண்டி தலதாமாளியின் பெரஹராக்களில் சுமார் 45 வருடங்களுக்கும் மேலாக பங்கேற்ற  ஒற்றைத் தந்தத்தையுடைய கொம்பன் யானை, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

மேற்படி யானை, பக்றீரியா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, மேற்படி அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தலதாமாளிகையின் தந்தையா உயிரிழந்தமைக்கு ஒருவரும் காரணமில்லை என்றும், தந்தையாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமையே இதற்கு காரணமென்றும், அவ்வமைப்பின்  தலைவர் மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .