Kogilavani / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது, சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் பலர் திருப்பியனுப்பப்பட்டனர் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி, குருவிட்ட, அவிஸ்ஸாவளை, பலாபத்வல, பலாங்கொடை ஆகிய பகுதிகளிலிருந்து யாத்திரை மேற்கொண்டவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சகர் சேனக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், யாத்திரை மேற்கொள்பவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் வதிவிடச் சான்றிதழ், வைத்தியச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் உரிய ஆவணங்களின்றிப் பயணித்த யாத்திரிகர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இந்த நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் சிவனொளிபாத மலையடிவாரத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago