Editorial / 2018 ஜனவரி 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம் செல்வராஜா
ஊவா மாகாண சபையின் உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்திக்கு எதிராக, சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள்
முறைப்பாடு செய்துள்ளனர்.
தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி, பதுளை மாவட்டத்தில், பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த, படித்த இளைஞர், யுவதிகள் 20 பேரிடம் நாற்பது இலட்சம் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாகவே, மேற்படி முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பதுளை குற்றப் புலனாய்வு துறையினர் ஆகியோரிடமே, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் முறையிட்டுள்ளனர்.
ஊவா மாகாண சபையின்
இ.தொ.கா உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி, மேற்படி மோசடியில் ஈடுபட்டதையடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து இவர், ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியுள்ளார் என்று அறியமுடிகிறது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago