R.Maheshwary / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பின்லே பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸலாவை எனிக் மேற் பிரிவு தோட்டத்தில் தேயிலை மரங்கள் பயிரிடப்படக்கூடிய மலைகளில் யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்கு எனிக் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மரக்கன்றுகள் நடுகையை நிர்வாகம் நிறுத்தாவிட்டால், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் அத்தோட்ட தொழிலாளர்கள் ஈடுப்படப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியை ஊக்குவிக்காது, தேயிலை மலைகளில் யூக்கலிப்டஸ் மரங்களை நட்டு, தேயிலையை ஒழித்து, மரங்கள் ஊடாக இலாபத்தை ஈட்டிக்கொள்ள பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத் தலைவர்கள் மூலம் அறிவித்துள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago