Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
'காயத்திரி உபாஷனையும் கிரியா யோகா ஓர் அறிமுகமும்' எனும் தொனிப்பொருளிலில், யோகா பயிற்சிப்பட்டறையொன்று, நுவரெலியா கந்தப்பளையிலுள்ள மெதடிஸ்ட் கல்லூரியின் பிரதான மண்டபத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமை (25, 26) ஆகிய இரு தினங்களும், காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.
சங்கராநந்தா பாபாஜி யோகா ஸ்டூடியோ நிலையத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிப்பட்டறையில், கிரியா யோகா பற்றிய அறிமுகம், காயத்திரி அம்மன் பற்றிய உபாஷனை, தியானம், சிகிச்சைமுறை, சத்சங் என்பவைத் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதுடன் யோகாசனப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
பயிற்சியின் ஆரம்ப தினமான சனிக்கிழமை(25) காலை, யாகப் பூஜையொன்றும் இடம்பெறவுள்ளது. யாக பூஜையைத் தொடர்ந்து, யோகாசனப் பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளன.
கட்டணம் செலுத்தப்பட்ட இந்தப் பயிற்சிநெறியில், தலா ஒருவருக்கு 2000 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தப் பயிற்சிநெறியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 077-2224908 என்ற அலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago