2025 மே 05, திங்கட்கிழமை

ரயில் சேவைகள் மட்டுப்பாடு

Freelancer   / 2023 நவம்பர் 23 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திலுள்ள ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் நேற்றைய தினம் (22) நான்கு தடவைகள் புகையிரத பாதைகள் தடைபட்டதாக. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் அதிக மழை காரணமாக நேற்றிரவு (22)  இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி இன்று  (23)  காலை 5 மணியளவில் 31ஆம் இலக்க சுரங்கப்பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒஹியா மற்றும் இடல்கசின்ன நிலையங்களுக்கு இடையிலான புகையிரதப் பாதைகள் தடைப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றிரவு 10.15 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஹாலி-எல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளுக்கு இடையிலான புகையிரதப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், ஹாலி-எல மற்றும் தெமோதர இடையேயான ரயில் பாதையும் தடைபட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X