2025 மே 03, சனிக்கிழமை

ரயில் தடம்புரள்வு

Janu   / 2024 ஜூன் 03 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - பதுளை ரயில் வீதியில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் திங்கட்கிழமை (03) மாலை தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் 7ஆம் இலக்க பயணிகள் ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, மலையக ரயில் சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட பெட்டிகளை சரிசெய்து ரயில் வீதியை சரி செய்யும் வரை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் 8 ஆம்  இலக்க பயணிகள் புகையிரதம்  தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறை  தெரிவித்துள்ளது.

பி.கேதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X