Editorial / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் அதிகமானோர் வாக்களிப்புக்கு சமுகமளிக்கப்போவதில்லை என்றும் எம்மிடம் பலர் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நிச்சயம் வெற்றிபெறுவதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணியின் புதுக்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளும் கூட்டமொன்று, கினிகத்தேனை பீடாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026