Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன்- வட்டவளை, விக்டன் கீழ் பிரிவில் வசித்த, 84 வயதுடைய வள்ளியம்மா ராக்காயின் மரணம் கொலையென, பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதிமன்ற வைத்தியர் இனோகா ரத்னாயக்க இன்று (16) தெரிவித்துள்ளார்.
துணி நாடாவொன்றில் இந்தத் தாயின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனையை முன்னெடுத்த வைத்தியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி குறித்த தாய் அவரது மகன், பேரப்பிள்ளை ஆகியோரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், 13ஆம் திகதி அவர்களின் வீட்டின் பின்புறமாகவுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பு ஆமர்வீதி விடுதியொன்றிருந்து மகனும், பேரப்பிள்ளையும் கைதுசெய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து,கொல்லப்பட்ட பெண்ணின் மகனை இந்த மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலிலும் பேரனை 23ஆம் திகதி வரை பேராதனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் தடுத்து வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனையின் போது, இச்சம்பவம் கொலையெனப் பதிவாகியுள்ளதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
18 minute ago
25 minute ago
34 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
34 minute ago
54 minute ago