Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 12 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவநீதன்
வீட்டுப் பணியாளர் ஆர்.ராஜகுமாரிக்கு நீதிக்கோரிய போராட்டம் புஸ்ஸல்லாவை இரட்டைப்பாதை நகரில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட அதிகாரி ஆர் சண்முக தீபாவின் தலைமையில் நயாபனை மற்றும் அட்டப்பாகை கிராம அபிவிருத்தி சங்க கூட்டமைப்புகள் ஒன்றிணைந்தத செயற்பாட்டில் நடைபெற்றது.
பதுளையை வசிப்பிடமாக கொண்ட வீட்டுப் பணிபுரிந்த இவர் கடந்த 2023 மே மாதம் அவரது தொழில் வழங்குனரான சுதர்மா நித்திக்குமாரா என்பவரின் வீட்டில் தங்க மோதிரத்தை திருடிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் வெலிக்கடை சிறைகாவலில் விசாரணைகள் நடைபெற்ற வேலையில் இறந்ததாக செய்திகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு மரணித்த வீட்டு பணியாளர் ஆர். ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பக்க சார்பின்றி உயர் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் தற்பொழுது உள்ள கொலை குற்றம் மற்றும் சித்திரவதைக்கு எதிரான சட்டங்கள் அதாவது சித்திரவதை மற்றும் ஏனைய கொடுமையான மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் வகையில் நடந்தும் முறைமைகளுக்கு எதிரான சமுதாயம் அல்லது தண்டனைகளை ,சட்டம் என்பன சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பல கோஷங்களுடன் இப் போராட்டம் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025