2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

லோகி தோட்டத்தில் மோதல்: இளைஞன் காயம்; இருவர் கைது

Kogilavani   / 2016 ஜூன் 15 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சுஜிதா, ஆர்.ரமேஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில், அ.இலங்கேஸ்வரன் என்ற 24 வயது இளைஞனை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாகக் கூறப்படும் இருவரை, லிந்துலை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று(15) கைதுசெய்துள்ளனர்.

காணி விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் செவ்வாய்க்கிழமை(14) இரவு ஏற்பட்ட  மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலில் மேற்படி இளைஞன்  கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய  இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலும் இருவைரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .