Editorial / 2023 மார்ச் 21 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா லபுக்கலை பகுதியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (21) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, கந்தப்பளை, ஐபோரஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்செல்வம் (வயது - 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்று கடந்த 5 ஆம் திகதி லபுக்கலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago