Kogilavani / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
லிந்துலை பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட தோட்டப் பகுதிகளில் பத்து பேருக்கு, நேற்று (04) மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.புஸ்பகாந்தன் தெரிவித்துள்ளார்.
வட்டவளை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட நாகசேனை டியநிலகல தோட்டத்தைச் சேர்ந்த ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் ஹில்டன்ஹோல், மௌசாகலை, தோன்பீல்ட், இராணிவத்தை, ஹோல்டீரம் ஆகிய தோட்டங்களில் தலா ஒருவருமாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
லிந்துலை பொதுசுகாதாரப் பிரிவில் 28ஆம் திகதி மேற்கொள்ளப்டப்ட பிசிஆர் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானபோதே, 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி 10 பேரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago