Kogilavani / 2021 மே 12 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
தலவாக்கலை- லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய, லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேற்படி வைத்தியசாலையில் 5, 6 ஆம் விடுதிப் பிரிவுகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படவுள்ளன. இத்தொகுதிகள் மற்றுமொரு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன.
இதற்கான பணிகள், தலவாக்கலை நகரசபை தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தலைமையில் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும் லிந்துலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துலையாடல் ஒன்றும்
வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.பி.ஜயலத் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆளுநர், நகர சபையின் உதவியுடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நகரசபை தலைவர் உறுதியளித்தார்.
மேலும் வைத்தியசாலைக்குத் தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago